புதன், 3 அக்டோபர், 2012

சிந்தனைக்கு --உறவும் துறவும்

உறவும் துறவும்

உலக வாழ்வில் பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் என்ற நான்கிலும் பற்று ஏற்படுவது இயல்பேயாகும். கடமை உணர்வோடும், அளவு-முறை அறிந்த விழிப்போடும் ஆசைகளை வளர்த்துக் காத்துக் கொள்ள வேண்டியது பிறவிப்பயனை எய்த அவசியம்.

தூங்கும்போது மட்டுமே ஒருவருக்குத் தலையணை வேண்டும். அதற்காக அதனை எந்நேரமும் தலையில் கட்டிக் கொண்டிருப்பதில்லை. அதுபோல, கொதிக்கும் பாலை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைக்கத் துடிக்கும்போது மட்டும் பிடிதுணியை மறவாது பயன்படுத்திகிறோம். மற்ற நேரங்களில் அதைத் தொடுவதில்லை. இவ்வாறாக எப்பொருளோடும் மக்களோடும் விழிப்பு நிலையில் அளவோடும் முறையோடும் உறவு கொள்ள வேண்டும்.

உறவிலே கண்ட உண்மை நிலைத் தெளிவே துறவு.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக