"மலர் வழியே விளங்கும் மறைபொருள்"
மலரே மலரே நீயார் உன்
மணமும் அழகும் வண்ணமும் என்
பலவாரான நினைவகற்றிப்
பார்க்க உன்னில் ஆழ்ந்து விட்டேன்.
இயற்கை அழகை ரசிக்கும் உன்
எண்ணம் மிகமிக உயர்ந்துளது
செயற்கை மயக்கம் தெளிந்தறிவு
செம்மை பெறஎன் கதை சொல்வேன்.
மலரே நீயார் எனக் கேட்டாய்
மறை பொருளான தெய்வமே நான்
சிலரே அறிவார் இவ்வுண்மை
சிந்தனை செய்ய வல்லவர்கள்.
பரம அணுக்கள் பல,கோடி
பண்பாய்க் கூடி ஒரு கூத்து
கரம் கோர்த்தாடும் நாடகத்தோர்
கூட்டம் எந்தத் தோற்றமும் ஆம்
இறைவன் என்ற ஆதிபரம்
எடுத்த பலப்பல கோடி உரு
நிறைந்த பெரிய மண்டலமே
நெடிய விரிந்த பேரண்டம்
பெரிய இயக்க மண்டலமே
பிரபஞ்சம் எனும் மேடையிலே
அரிய உருவ அழகோடு
ஆடுகின்றேன் நான் அவன்கதையாய்
ஆதியின் அசைவே பரம அணு
அவை ஒவ்வோர் அளவில் கூட
வேதம் கூறும் ஐம்பூதம்
விண்முதல் மண்வரை வேறில்லை.
ஒவ்வொரு பொருளும் பரமுதலாய்
அவ்வுருவரையில் வந்த கதை
செவ்விய சிறு சொல் பரிணாமம்
சிறப்பை உணர்வாய் நீயுமதே.
என்னைக் கண்ணால் பார்மலராய்
எனதமைப் புணர அணுக்கூட்டே
முன்னம் பரமே அணுவாச்சு
மூலம் சிவமாம் பிரம்மமதே,
உருவம் மலர்தான் உட்பொருளை
உணர விண்னெனும் நுண்ணனுவே
அருவம் ஆதி அசைந்த நிலை
அணுமுதல் அகண்ட பேரண்டம்.
உன்னை யாரென்றேன் மலரே
உணர்த்தி விட்டாய் உண்மைப்பொருள்
பின்னை இந்தப் பேரறிவில்
பிறழாதிருப்பேன் விழிப்புடனே.
ஆறறிவாக வாழ மனிதர்
அதற்கு ஏற்ப பொருத்தமுள
பேறு உண்மைப் பொருளுணர்தல்
பிறவிப் பயனைப் பெற்றுவிட்டேன்.
- வேதாத்திரி மகரிஷி
மலரே மலரே நீயார் உன்
மணமும் அழகும் வண்ணமும் என்
பலவாரான நினைவகற்றிப்
பார்க்க உன்னில் ஆழ்ந்து விட்டேன்.
இயற்கை அழகை ரசிக்கும் உன்
எண்ணம் மிகமிக உயர்ந்துளது
செயற்கை மயக்கம் தெளிந்தறிவு
செம்மை பெறஎன் கதை சொல்வேன்.
மலரே நீயார் எனக் கேட்டாய்
மறை பொருளான தெய்வமே நான்
சிலரே அறிவார் இவ்வுண்மை
சிந்தனை செய்ய வல்லவர்கள்.
பரம அணுக்கள் பல,கோடி
பண்பாய்க் கூடி ஒரு கூத்து
கரம் கோர்த்தாடும் நாடகத்தோர்
கூட்டம் எந்தத் தோற்றமும் ஆம்
இறைவன் என்ற ஆதிபரம்
எடுத்த பலப்பல கோடி உரு
நிறைந்த பெரிய மண்டலமே
நெடிய விரிந்த பேரண்டம்
பெரிய இயக்க மண்டலமே
பிரபஞ்சம் எனும் மேடையிலே
அரிய உருவ அழகோடு
ஆடுகின்றேன் நான் அவன்கதையாய்
ஆதியின் அசைவே பரம அணு
அவை ஒவ்வோர் அளவில் கூட
வேதம் கூறும் ஐம்பூதம்
விண்முதல் மண்வரை வேறில்லை.
ஒவ்வொரு பொருளும் பரமுதலாய்
அவ்வுருவரையில் வந்த கதை
செவ்விய சிறு சொல் பரிணாமம்
சிறப்பை உணர்வாய் நீயுமதே.
என்னைக் கண்ணால் பார்மலராய்
எனதமைப் புணர அணுக்கூட்டே
முன்னம் பரமே அணுவாச்சு
மூலம் சிவமாம் பிரம்மமதே,
உருவம் மலர்தான் உட்பொருளை
உணர விண்னெனும் நுண்ணனுவே
அருவம் ஆதி அசைந்த நிலை
அணுமுதல் அகண்ட பேரண்டம்.
உன்னை யாரென்றேன் மலரே
உணர்த்தி விட்டாய் உண்மைப்பொருள்
பின்னை இந்தப் பேரறிவில்
பிறழாதிருப்பேன் விழிப்புடனே.
ஆறறிவாக வாழ மனிதர்
அதற்கு ஏற்ப பொருத்தமுள
பேறு உண்மைப் பொருளுணர்தல்
பிறவிப் பயனைப் பெற்றுவிட்டேன்.
- வேதாத்திரி மகரிஷி
இயற்கை அழகை ரசிக்கும் உன்
எண்ணம் மிகமிக உயர்ந்துளது
செயற்கை மயக்கம் தெளிந்தறிவு
செம்மை பெறஎன் கதை சொல்வேன்.
மலரே நீயார் எனக் கேட்டாய்
மறை பொருளான தெய்வமே நான்
சிலரே அறிவார் இவ்வுண்மை
சிந்தனை செய்ய வல்லவர்கள்.
பரம அணுக்கள் பல,கோடி
பண்பாய்க் கூடி ஒரு கூத்து
கரம் கோர்த்தாடும் நாடகத்தோர்
கூட்டம் எந்தத் தோற்றமும் ஆம்
இறைவன் என்ற ஆதிபரம்
எடுத்த பலப்பல கோடி உரு
நிறைந்த பெரிய மண்டலமே
நெடிய விரிந்த பேரண்டம்
பெரிய இயக்க மண்டலமே
பிரபஞ்சம் எனும் மேடையிலே
அரிய உருவ அழகோடு
ஆடுகின்றேன் நான் அவன்கதையாய்
ஆதியின் அசைவே பரம அணு
அவை ஒவ்வோர் அளவில் கூட
வேதம் கூறும் ஐம்பூதம்
விண்முதல் மண்வரை வேறில்லை.
ஒவ்வொரு பொருளும் பரமுதலாய்
அவ்வுருவரையில் வந்த கதை
செவ்விய சிறு சொல் பரிணாமம்
சிறப்பை உணர்வாய் நீயுமதே.
என்னைக் கண்ணால் பார்மலராய்
எனதமைப் புணர அணுக்கூட்டே
முன்னம் பரமே அணுவாச்சு
மூலம் சிவமாம் பிரம்மமதே,
உருவம் மலர்தான் உட்பொருளை
உணர விண்னெனும் நுண்ணனுவே
அருவம் ஆதி அசைந்த நிலை
அணுமுதல் அகண்ட பேரண்டம்.
உன்னை யாரென்றேன் மலரே
உணர்த்தி விட்டாய் உண்மைப்பொருள்
பின்னை இந்தப் பேரறிவில்
பிறழாதிருப்பேன் விழிப்புடனே.
ஆறறிவாக வாழ மனிதர்
அதற்கு ஏற்ப பொருத்தமுள
பேறு உண்மைப் பொருளுணர்தல்
பிறவிப் பயனைப் பெற்றுவிட்டேன்.
- வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக