வினா: ஐயா, இறைவனுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்ன ?
மகரிஷியின் விடை:
இறைவன் என்னும் தத்துவம் எங்கும் நிறைந்துள்ள ஓர் பேராற்றல். அதனுடைய
தன்மைகளில் இன்னொன்று அன்பு. அந்த அன்பு உங்கள் எண்ணம், சொல், செயல்களில்
ஊடுருவி நிறைந்திருந்தால் அது தான் நீங்கள் இறைவனுக்குச் செய்ய வேண்டிய
கடமை. எல்லோரிடத்திலும் அன்பைக் காட்டுங்கள். இறைவன் மகிழ்ச்சி அடைவான்.
ஏனெனில் அவன் அன்பும் கருணையுமாக அனைத்து உயிர்களிலும் நிறைந்துள்ளான்.
அவனை மகிழ்விக்க இதைவிடச் சிறந்த வழி வேறொன்றில்லை. உடலும் குடலும் அற்ற
இறைவனுக்கு வேறு ஒரு தேவையுமில்லை. பொருட்களைக் கொடுத்து அரூபமான இறைவனை
மகிழ்விக்க நினைப்பது அறியாமையே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக