வினா: சுவாமிஜி, "கருவிலே திருஉடையார் ஆதல்?" என்கிறார்களே அதன் பொருள் என்ன?
மகரிஷியின் விடை: பதினான்கு வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும்
உடற்பயிற்சி, தவம் மற்றும் காயகல்பப் பயிற்சி கற்றுப் பயின்று வந்தால்
வித்தில் உள்ள குறைகள் அகன்று விந்து-நாதம் தூய்மைப்படும். பிற்காலத்தில்
அவர்கள் திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை உடல்
நலம் மற்றும் மனவளம் மிக்கதாகவும், அறிவுக் கூர்மையுடையதாகவும், ஆன்மீக
எண்ணம் கொண்டதாகவும் இருக்கும். இவ்வாறு பிறக்கும் பொழுதே சான்றோனாகத்
தோன்றுவதை "கருவிலே திருஉடையார் ஆதல்" என்கிறார்கள்.
விவசாய,
விஞ்ஞானத் துறையில் எவ்வாறு வித்து பழுதடைந்து இருந்தால் அதிலிருந்து
தோன்றும் மரம் பழுதடைகிறதோ, எவ்வாறு வீரியவித்தை உபயோகித்தால் பலன்
சிறப்பாக உள்ளதோ, அதே போன்ற இயற்கை நியதி இதற்கும் பொருந்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக