புதன், 12 செப்டம்பர், 2012

கேள்வி-- பதில் கருவிலே திருஉடையார் ஆதல்

வினா: சுவாமிஜி, "கருவிலே திருஉடையார் ஆதல்?" என்கிறார்களே அதன் பொருள் என்ன?

மகரிஷியின் விடை: பதினான்கு வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் உடற்பயிற்சி, தவம் மற்றும் காயகல்பப் பயிற்சி கற்றுப் பயின்று வந்தால் வித்தில் உள்ள குறைகள் அகன்று விந்து-நாதம் தூய்மைப்படும். பிற்காலத்தில் அவர்கள் திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை உடல் நலம் மற்றும் மனவளம் மிக்கதாகவும், அறிவுக் கூர்மையுடையதாகவும், ஆன்மீக எண்ணம் கொண்டதாகவும் இருக்கும். இவ்வாறு பிறக்கும் பொழுதே சான்றோனாகத் தோன்றுவதை "கருவிலே திருஉடையார் ஆதல்" என்கிறார்கள்.

விவசாய, விஞ்ஞானத் துறையில் எவ்வாறு வித்து பழுதடைந்து இருந்தால் அதிலிருந்து தோன்றும் மரம் பழுதடைகிறதோ, எவ்வாறு வீரியவித்தை உபயோகித்தால் பலன் சிறப்பாக உள்ளதோ, அதே போன்ற இயற்கை நியதி இதற்கும் பொருந்தும்.

எனது வாழ்க்கை விளக்கம்--maharishi


எனது வாழ்க்கை விளக்கம் - குழந்தைப் பருவம்

எனது குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள் எனக்குத் தெரியாது. ஆகையால் என் மூத்த அக்காள் வாயிலாகக் கேட்டறிந்தபடி எழுதுகிறேன்.

இந்த வரலாற்றில் வரும் சில நிகழ்ச்சிகளை என் அன்னையே எனக்குச் சொல்லியும் உள்ளார்கள்.

இந்திய நாட்டில் சென்னை மாநிலத்தில் செங்கற்பட்டு மாவட்டம் அமைந்துள்ளது. இம் மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி என்னும் பெயருடைய சிற்றூர்தான், நான் பிறந்த ஊர். என் அருமை அன்னையின் பெயர் சின்னம்மாள். என் மதிப்பு மிக்க தந்தையின் பெயர் வரதப்ப முதலியார். செங்குந்தர் குலம். என் தந்தை கை நெசவுத் தொழிலைச் செய்து வந்தார். என் பெற்றோருக்கு நான் எட்டாவது குழந்தை. எனக்கு முன்னர்ப் பிறந்த ஆண் மகன், ஏழாவது வயதில் இயற்கை எய்தி விட்டான். எனக்கு முன் பிறந்த பெண்கள் ஆறுபேர். அவர்களில் இப்போது மூவர்தான் உள்ளனர். அவர்கள் பெயர்கள் முறையே கற்பகம், சின்னம்மாள், நாகம்மாள். எனக்கு இளையவன் ஒருவன். அவன் பெயர் தெய்வசிகாமணி. இப்போது சைதாப்பேட்டையில் வாழ்ந்து வருகிறான். இந்தக் குறிப்புகளை விளக்கும் கவிகள் கீழே உள்ளன. படியுங்கள்.

"கோயில்குளம் சென்று பலநோன்பு நோற்றுக்
குலத்திற்கோர் மகன் வேண்டித் தவம்புரிந்த
தாயின் பெயர் சின்னம்மாள்; பரம ஏழை;
தந்தை பெயர் வரதப்பன்; இவர்களுக்கு
ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பதினொன் றாண்டில்,
ஆகஸ்டு பதினான்கு திங்கள் காலை,
போயின நூற்றிருபத்தியொரு விநாடி
பிறந்தேன் யான்; கூடுவாஞ்சேரி ஊரில்"

"மீன இராசிச், சிம்ம இலக்கனத்தில்,
மேடத்தில், இராகு சனி செவ்வாய் நிற்க,
பானு கடகம் புதனோ இலக்கினத்தில்
பலமிழந்து கன்னியிலே சுக்கிரன் நிற்க,
வானகுரு கேது துலா இராசி நிற்க,
வந்த உத்திரட்டாதி மீன் சனி திசையில்,
போன மிச்சம் மூன்றாண்டு, ஐந்து திங்கள்,
பொழுதைந்து; இதுவே என் பிறந்த காலம்."

"எனக்கு முன்னம் பிறந்தோர்கள் பெண்கள் ஆறு
ஏறுஒன்று இருபெண் ஓர் ஆண் இறந்தார்
மனக்கவலை வறுமை இவைக் கிடையே வாழ்ந்து,
மகனாக எனைப் பெற்றோர், மறந்தார் துன்பம்;
தனக்கில்லா விடினும், தன் மக்கட் கிட்டுத்
தாய்க்கடமை செய்வோரில் தலை என் அன்னை;
இனத் தொழிலாம் கை நெசவில் ஈடுபட்டு
இரவுபகலாய் உழைத்தார் எனது தந்தை."

ஆறு பொண்களைப் பெற்ற பெற்றோர்கட்கு, ஏழாவது ஆண் மகவு பிறந்து, அதுவும் ஏழு வயதில் இறந்துவிட்டால், அவர்கள் மனம் எவ்வாறிருக்கும்? எப்போதும் தெய்வத்தை நினைந்து நினைந்து உருகினார்கள். பல நோன்புகளை நோற்றார்கள். தரையை மெழுகி, சாப்பாடு அதன் மேல் போட்டுக்குனிந்து வாயினால் சாப்பிடும் ஒரு நோன்பைக்கூட சிலநாள் என் அன்னை கடைப்பிடித்ததாகச் சொன்னார்கள். என் பெற்றோர் பக்தியில் ஆழ்ந்தவர்கள். அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் நடத்தி வைப்பதாக வேண்டிக்கொண்டால், ஆண் மகவு பிறக்கும் என்று யாரோ சொன்னார்களாம். கூடுவாஞ்சேரியில் அப்போது அரசு வேம்பு இணைந்த மேடை கிடையாது. என் தந்தையார் ஒரு அரச மரச் செடியையும், வேம்பு மரச் செடியையும் தேடிக் கொண்டுவந்து, கூடுவாஞ்சேரிக் குளக்கரையில் மேற்கு பக்கத்தில் வைத்து வளர்த்தார். அதை வளர்க்க அவர் பட்ட தொல்லைகளை ஒரு நாள் விளக்கிக் கூறினார். என் கண்களில் நீர் கலகலவென்று சொரிந்தது. அந்த இரண்டு செடிளும் மரமாகும் வரைக்கும், ஒரு ஏழை நெசவாளி தனது பிழைப்பிற்குத் தொழில் செய்து கொண்டே, அவற்றை காவல் காத்துத் தண்ணீர் ஊற்றி வரவேண்டுமெனில் எவ்வளவு உழைப்பு உழைத்திருக்க வேண்டும்? அந்த மரங்கள் வளர்ந்தன. இப்போது கூட, நான் பார்க்க நேர்ந்தால், அவை ஏதோ என்னோடு பேசுவதாகவே தோன்றுகிறது. ஆலய வழிபாட்டிலும், மதச் சடங்குகளிலும் உள்ள தேவையற்ற செயல்களை விளக்கி அவற்றை ஒழித்துத் தெளிவோடு வாழவேண்டும் என்று சீர்திருத்தம் பேசும் என்னை நோக்கி, அந்த மரங்கள் உங்கள் பெற்றோர் எங்கள் வாழ்வோடு, உனது பிறப்பை இணைத்து வைத்தனர் என்று கூறுவது போல், ஒரு நினைவு எழுகின்றது. அவர்கள் உள்ளத்தின் நிலை அது. சிம்ம லக்கினத்தில் ஆண் குழந்தை பிறந்து விட்டது என்று, அறிந்த எனது தந்தைக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஊர் முழுவதும் சர்க்கரை வழங்கி அவர் உள்ளப் பூரிப்பை வெளிகாட்டினார். குழந்தைப் பருவத்தில் மிகவும் அழகாக இருந்தேனாம். நான்கு வயதிற்குமேல் நடந்த சம்பவங்கள்தான் எனக்குச் சுமாராக நினைவுக்கு வருகின்றன. என்னைக் கீழே நடக்க விடமாட்டார்கள். என் அன்னையாரும், தந்தையாரும் என்னிடம் காட்டிய அன்பையும், பாசத்தையும் நான் எந்த உவமைகொண்டு கூறுவேன். மூன்று வயதில் ஒருநாள் என்னைத் தனது வயிற்றின் மீது கிடத்திக்கொண்டு, மல்லாந்து படுத்துக் கொண்டே தூங்கி விட்டார்கள் என் அன்னை. அப்போது நான் முன்னோக்கி விரைவாக அவர்கள் வாயில் தலையால் மோதிவிட்டேனாம். முன் பல்லில் ஒன்று பெயர்ந்து விட்டதால், இரத்தம் கொட்டிக் கொண்டிருந்ததைக் கூடப் பாராமல், தனது வாயைப் பொத்திக்கொண்டு குழந்தை தலையில் அடிபட்டிருக்குமே, எவ்வளவு வலி குழந்தைக்கு இருக்குமோ என்று கதறி அழுதார்களாம். என்னைக் கீழே கிடத்திவிட்டுத் தூங்கினால், எறும்பு கடிக்குமோ என்று வயிற்றின் மீது போட்டுக்கொண்டு தூங்கினார்கள் என்றால், ஒரு மகனுக்காக ஒரு தாய் ஆற்றும் தொண்டு எத்தகையது? தாய் அன்புக்கு இணையாகச் சொல்லக்கூடிய ஒன்று வேறு ஏதும் உண்டா?

குறிப்பு: இக்கட்டுரை "அன்பொளி" மாத இதழில் 1969-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எழுதப்பெற்றது. அப்போது என் உடன் பிறந்தவர்கள் அக்காள்கள் மூவர், தம்பி ஒருவன். ஆக நால்வர் இருந்தனர். 1980-ஆம் ஆண்டு எனது வாழ்க்கை வரலாறு தனி நூலாக வெளியிடும் போது எனது உடன்பிறந்தோர்களில் நாகம்மாள் மாத்திரமே, உயிருடன் உள்ளார். மற்ற இரண்டு அக்காள்களும், ஒரு தம்பியும் இயற்கையெய்திவிட்டனர்.

திங்கள், 10 செப்டம்பர், 2012

ஆக்கினை -தவம்

வாழ்க வளமுடன்,  எளிய  முறை குண்டலினி யோகத்தில்

  • மிக எளிய வழியில் ஆக்கினை தவம் கற்றுத் தரப்படுகிறது.
  • பிட்யூட்டரி எனும் நாளமில்லா சுரபியை தூண்டி விடும் தவம்.
  • பிட்யூட்டரி மற்ற நாளமில்லா சுரப்பிகளை கட்டுப்படுத்தக்கூடியது.  
  •  எனவே புலன்களை கட்டுக்குள் கொண்டுவரும்.
  • எளிதில் உணர்ச்சி வசப்படுவது தடுக்கப்படுகிறது.
  • பின்வரும் காலங்களில் வருத்தப்படாத அளவில் தற்கால வாழ்க்கை முறை சீர்ப்படுத்தப்படுகிறது.
  • ஐம்புலனும் அறிவின் வசம் கட்டுப்படும்.
  • ஏறுபடி, பஞ்சனை மேல் இருக்கை, நெற்றிக்கண், முச்சந்தி வாசல் என பல பெயர்.
  • குண்டலினி எனும் மகா சக்தியை {உயிர் மையத்தை} புருவ மத்தியில் இயங்கச்செய்வது 
  • ஆகாமியம் எனும் கர்ம வினையை நீக்கக்கூடியது.
  • முக்கடல் எனும் பிங்கலை,இடைகளை,சுழுமுனை நாடிகள் சங்கமிக்கும் இடமான மூலாதாரத்தில்  உள்ள குண்டலினியை எழுப்புதல் 
  • ஏடன் தோட்டம்

வீடியோ

http://www.youtube.com/wcscit

படங்கள்
















அகத் தவம்

 அகத் தவம்: அகத்தவத்தின் பெருமை ”அகத் தவத்தின் பொருள் கண்டு அதன் பெருமை உணர்ந்திடுவீர்! அகத் தவமோ உயிரினிலே அறிவை ஒடுக்கும் பயிற்சி! அகத் தவத்தால் மேலும...

படங்கள்















எல்லாம் வல்ல தெய்வமது---பாடல்

எல்லாம் வல்ல தெய்வமது---பாடல்: எல்லாம் வல்ல தெய்வமது எங்கும் உள்ளது நீக்கமற சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய் வல்லாய் உடலில் இயக்கமவன் வாழ்வில் உயிரில...