புதன், 28 டிசம்பர், 2011

கவலை வேண்டாம் kavi

         கவலை வேண்டாம்
அறிவாற்றல் கவலையினால்
                                    வீணாய் போகும்.
அதையடுத்து உடல் நலமும்
                                      குன்றிப் போகும்.
அறிவினையே முயற்சி
                              சிந்தனையாய் மாற்றி
அதற்கேற்ப செயலாற்ற
                                   நலம் விளைக்கும்.
            வேதாத்திரி மகரிஷி

கவி --மனவளக்கலையின் சிறப்பு

         மனவளக்கலையின் சிறப்பு
வாழ்க்கைத் தத்துவம்எண்ணம்
                         ஆராய்தல் ஆசை
வளமாக்கிச் சீரமைத்துச்
                        சினம்தவிர்த்துக் கவலை
வாழ்க்கையிலே நிலவாமல்
                        காத்துஅறி வறியும்
வழிகளெல்லாம் மனவளக்
                        கலைபயிலக் கிட்டும்.
வாழ்க்கையிலே உடல்உள்ளச்
                        சோர்வுபோக்கி எந்த
வயதினரும் காயகற்பக்
                       கலைகற்றுத் தங்கள்
வாழ்க்கையிலே வளம்பெற்று
                        தங்களுக்குப் பின்னால்
வரும்பிறவிச் சந்ததிகள்
                     வளம் பெறவும் காண்போம்.

செவ்வாய், 13 டிசம்பர், 2011

கவி --கற்பு.

                                                               கற்பதனைக் காப்பாற்ற இருபாலாருக்கும் 
இருபாலாருக்கும் 
கற்பு  பொதுவே
கடமை பொதுவே எனினும் தவறிவிட்டால்
அற்புதமாம் இயற்கையிலே அமைந்த வேகம் 
ஆணைவிட்டுப் பெண்ணுக்கே சின்னம் வைக்கும்;
சற்புத்திரன் போல அவன் உலாவ 
சமூகத்தால் அவள் தூற்றப்படுவாள்; 
 அதனால் நற்பண்பாம் கற்பொழுங்கை 
                                                       உயிரின் மேலாய் நாடுகின்றார் 
                                                       அறிவுடைய பெண்கள் எல்லாம். - வேதாத்திரி மகரிஷி.